Sunday 27 December 2015

வயிறு பசி!!!

தானென்ற நாயுருவி வித்து தன்னை
தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா
பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று எத்தனை நாள் இருந்தாலுந்தான்
நளினமுடன் பசியாது மைந்தா பாரே"

- அகத்தியர் -

நாயுருவி வித்து எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் வயிறு பசி எடுக்காது என்று சொல்லும் அகத்தியர் எத்தனை நாள் சென்றாலும் பசி எடுக்காது என்கிறார்.


"பாரப்பா பசிஎளுப்ப வேண்டுமென்றால்
பண்பாக சொல்லுகிறேன் மைந்தா கேளு
வீரப்ப எலும்பியதோர் மஞ்சளிஞ்சி
விரும்பியே தின்றிடவே வேகம் கொண்டு
காரப்ப மூல அக்கினியே நீறும்
கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
சித்து வித்தை அநேகமுண்டு தெளிந்து காணே"

- அகத்தியர் -

மீண்டும் பசி எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும் அத்துடன் தூய, நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல பல சித்துமுறை தெரியவரும் என்கிறார்TEXT TEXT

Thursday 10 December 2015

பொடுகு (Dandruff) தொல்லையா? ஒரு தீர்வு..

பொடுகு (Dandruff) தொல்லையா? ஒரு தீர்வு..




பொடுகு தோன்றுவதற்குப் பெயரும் காரணம் தோலில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் PO VALE எனப்படும் பூசண பீடிப்பு(பங்கஸ்)கிருமிகள் உண்டாகி அவை வளர்ந்தது பொடுகு உண்டாகும். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக ஏற்படும். இதற்கு Seborrhea dermatitis. என்று பெயர்.


பொடுகு என்றால் என்ன?
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?
1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது..

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது

5. "பிடி ரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்தபொடுகு நோய் வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகுபெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.
"பிடிரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகுதொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுதொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.


பேன் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

1. வசம்பை தண்ணீர் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து கொஞ்சநேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்

2. வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து கொஞ்ச நேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்.

இப்படி செய்தால் பேன் செத்து போகும்.

முடி நீளமாகவும் ஸ்ராங்காகவும் வளர என்ன செய்ய வேண்டும்?

1. முட்டை வெள்ளை கருவை தனியாக எடுக்கனும் இதனுடன் நல்லண்ணெய் கொஞசம் கலக்கனும் தலையில் தேய்த்து ஊற வைக்கனும் அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து குளிக்கனும்

2. பாசிப்பருப்பு வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து பின்பு மாவாக அரைத்து கொள்ளவும். தலையில் நல்லெண்ய் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அரைத்த மாவை தலையில் தேய்த்து குளிக்கவும். இதனால் கூந்தல் அழகாககும் பளபளப்பாகவும் இருக்கும்.



கூந்தல் மிருதுவாக இருக்க…
1.வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

2.நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

3.டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.TEXT TEXT

Wednesday 9 December 2015

General Info.!!!

இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்
2.மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்
3.வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
4.கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்
5.நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
6.வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
7.மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்
8.கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர்
9.7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
10.மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
11.காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
12.வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
13.நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
14.திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்
15.பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
16.சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்
17.பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
18.ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப்
19.செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்
20.காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்
21.காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்
22.நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்
23.முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்
24.நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ
25.கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு
26.மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி
27.மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்
28.தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்
29.புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER )
30.எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)
31.இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram)
32.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்
33.மழையளவை அளக்க - ரெயின் காஜ்
34.இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்
35.நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்
36.தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்
37.சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்
38.காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
39.இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்
40.நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்
41.ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்
42.மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்
43.கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்
44.உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்
45.திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்
46.படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்
47.ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
48.ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
49.நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
50.சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்
51.மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்
52.கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
53.விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்
54.கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
55.இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர் =============================================================================


பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. மறவாமல் பகிருங்கள்.